யாழில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் – மீசாலையிலும் வாள் வெட்டு !

01.07.2021 09:42:05

 

மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று(புதன்கிழமை) மீசாலை – புத்துார் சந்தியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தில் பயணித்த குறித்த இளைஞன் மீசாலை – புத்துார் சந்தியில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் இளைஞனை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன், வாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் தலை, கை, கால் ஆகியவற்றில் காயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில். அண்மைக்காலமாக வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் வாள்வெட்டு சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.