பிலிப் சோல்டின் அதிரடியால் அபுதாபி அணி சிறப்பான வெற்றி !

29.11.2021 11:23:15

 

ரி-10 தொடரின் 22ஆவது லீக் போட்டியில், அபுதாபி அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

அபுதாபியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அபுதாபி அணியும் சென்னை பிரேவ்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அபுதாபி அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை பிரேவ்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் செஷாத் 53 ஓட்டங்களையும் ரவி பொபாரா ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.