சிம்பு - வெற்றிமாறன் படம் டிராப்!

31.07.2025 05:00:00

வெற்றிமாறன் மற்றும் சிம்பு கூட்டணியில் வடசென்னையை மையப்படுத்திய படம் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆகி இருந்தன. ஆனால் அந்த படம் தற்போது டிராப் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் செட் அமைக்க தாமதம் ஆவதால் தான் ஷூட்டிங் தள்ளிப்போகிறது எனவும் மற்றொரு தகவல் வந்தது.

தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் சிம்பு தனது சம்பளத்தை உயர்த்தி தரும்படி கேட்டதால் தான் அவருக்கும் தயாரிப்பாளருக்கும் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.

கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து விலக இருப்பதாக கூறப்படும் நிலையில், சிம்பு தற்போது வேறு தயாரிப்பாளர்கள் உடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம்.