அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் விமானம் கடலில் விழுந்ததில் அதில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸிலிருந்து நேற்று மதியம் Cessna 210 எனும் சிறிய ரகவிமானம் 2 குழந்தைகள் உட்பட 6 பேருடன் புளோரிடாவை நோக்கி புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, மிசிசிப்பியில் உள்ள பாஸ்ககூலாவிற்கு தெற்கே, சுமார் 8,800 அடி உயரத்தில் இருந்தபோது, மணிக்கு 322 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் கடலை நோக்கி சரிய தொடங்கியுள்ளது.சுமார் 3:30 மணியளவில் கண்காணிப்புத் தரவுகள் நின்றுபோன நிலையில், சுமார் 3:45 மணியளவில் கடலோரக் காவல்படைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோரக் காவல்படை மொபைல் பிரிவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற தேடலில், விமானத்தின் உடற்பகுதிக்குள் 6 நபர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் முன்னெடுத்து வருகிறது.