2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகுக்கக்கூடிய அரசாங்கத்தின் திட்டத்தைத் தடுப்பதற்காக கன்சர்வேட்டிவ் கட்சி தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளது. கனடா அரசு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 380,000 தற்கால குடியிருப்பு அனுமதிகளை மட்டுமே வழங்குவது என முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், 2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யும் திட்டம் ஒன்று ஃபெடரல் அரசிடம் உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யும் திட்டம் ஃபெடரல் அரசிடம் இருப்பதாகவும், அதனால் வீடுகள் தட்டுப்பாடு மற்றும் வேலை கிடைப்பது போன்ற விடயங்களில் பிரச்சினை ஏற்படும் என்றும் கூறி, கன்சர்வேட்டிவ் கட்சியினர் தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மிஷெல் ரெம்பெல் கார்னர் (Michelle Rempel Garner), கனடா சுமார் 662,000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கினால், கனடாவுக்கு கூடுதல் சுமை ஏற்படாமல் அத்தனை பேரை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறியுள்ளார்.அரசு, நம் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு வேகமாக புலம்பெயர்தல் மூலம் மக்கள்தொகையை பெருக அனுமதித்துள்ளது என்று கூறியுள்ளார் கார்னர்.இப்படி, மிக அதிகமான மக்கள் மிக வேகமாகப் பெருகுவதால், மருத்துவமனைப் படுக்கைகள், நோயறிதல் கருவிகள், மற்றும் மருத்துவர்களால் சமாளிக்க முடியாது, அதனால் மக்கள் இறக்க நேரிடும், இதுதான் இந்தச் சூழ்நிலையின் யதார்த்தம் என்றும் கூறியுள்ளார் அவர்.விடயம் என்னவென்றால், கனடா அரசு ஏற்கனவே அறிவித்தபடி 2027ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்டம், 380,000 பேர்தான். அதுபோக, 2027ஆம் ஆண்டில் மட்டும், கூடுதலாக 282,000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்க ஃபெடரல் அரசு திட்டமிட்டுள்ளது.இந்த இரண்டு எண்ணிக்கைகளையும் சேர்த்துத்தான் கன்சர்வேட்டிவ் கட்சியினர், ஃபெடரல் அரசு 2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யும் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர் .ஆனால், கன்சர்வேட்டில் கட்சியினர் குறிப்பிடும் அந்த கூடுதல் 282,000 பேரில் பெரும்பாலானோர், ஏற்கனவே தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் வாழ்ந்துவருபவர்கள்தான் என்கிறார் கனடா புலம்பெயர்தல் அமைச்சரான லினா டியாப் (Lena Metlege Diab).ஏற்கனவே கனடாவில் வாழ்பவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கும்போது, அவர்களை புதிதாக புலம்பெயர்ந்தவர்களாக கருத முடியாது என்கிறார் அவர்.அந்த 282,000 பேரில், 200,000 பேர் ஏற்கனவே பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவருபவர்கள். 50,000 பேர் சிறப்பு திட்டங்களின் கீழ் உக்ரைன் மற்றும் ஹொங்ஹொங்கிலிருந்து வந்தவர்கள்.இதுபோக, நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக சுமார் 45,000 இடங்கள் மனிதாபிமான அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களில் சிலர் மட்டுமே கனடாவுக்குப் புதிதாக வருபவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.