ஹாரி மேகன் தம்பதியர் பிரிந்து அமெரிக்காவில் குடியேறினர்

11.09.2021 15:47:29

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து முன்னதாக ஹாரி மேகன் தம்பதியர் பிரிந்து அமெரிக்காவில் குடியேறினர். இதனை முன்னரே கணித்த அரச குடும்பத்து பெண் ஜோதிடர் டெப்பி ஃபிராங் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார்.

ஜோதிடர் டெப்பி ஃபிராங் பிரிட்டன் இளவரசி டயானாவின் ஆஸ்தான பெண் ஜோதிடராக விளங்கியவர் ஆவார். ஜோதிடத்தின்மீது நம்பிக்கை கொண்ட டயானா அவ்வப்போது இவரிடம் ஆருடம் கேட்பது வழக்கம்.

அரச குடும்பம் தொடர்பான பல்வேறு விஷயங்களை டெப்பி ஃபிராங் சரியாக கணித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு டெப்பி ஃபிராங், ஹாரி-மேகன் ஆகிய இருவரும் அரச குடும்ப பதவிகளை துறந்து வேறு நாட்டில் குடியேறுவார்கள் என்று சரியாக கணித்து உள்ளார்.


மேலும் மேகன் மார்க்கல் அரச குடும்பத்துடன் இணக்கமாக இருக்க மாட்டார் என்று தெரிவித்திருந்தார். அதேபோல கறுப்பினத்தைச் சேர்ந்த அமெரிக்க நடிகை மேகன் மார்கல், பக்கிங்ஹாம் அரண்மனையில் தன்மீது இனப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டி கணவருடன் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடியேறினார்.

கடந்த ஆண்டு இந்த நிகழ்வு அரச குடும்பத்தின்மீது இனப்பாகுபாடு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் மேகனின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.

இதேபோல பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற பல விஷயங்களை டெப்பி ஃபிராங் முன்னர் சரியாக கணித்திருந்தார். கிரக பலன்களை கூறும் அவர் இளவரசி டயானா, மேகன், கேட் மிடில்டன் ஆகியோரது கிரக பலன்களை சரியாக கணித்து அவர்களது எதிர்காலம் குறித்து தெரிவித்திருந்தார்.

ஹாரி, மேகன் ஆகியோரது அரச குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் அவர்கள் அமெரிக்காவில் சிறந்த முறையில் வளமாக வாழ்வார்கள் என்று டெப்பி ஃபிராங் தற்போது தெரிவித்துள்ளார். இது டிவிட்டரில் வைரல் ஆகியுள்ளது.