100,000 டொலர்களை கடந்த பிட்கொயின் பெறுமதி!

05.12.2024 07:53:07

டிஜிட்டல் நாணய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக பிட்கொயின் (Bitcoin) பெறுமதி 100,000 அமெரிக்க டொலர்களை கடந்தது.

அண்மைய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் டிஜிட்டல் நாணயம் குறித்த நம்பிக்கை முதலீட்டார்களிடம் அதிகரித்து வரும் நிலையில் பிட்கொயினின் பெறுமதி உயர்ந்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பிட்காயின் பெறுமதி இருமடங்காக அதிகரித்துள்ளது மற்றும் ட்ரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து கடந்த நான்கு வாரங்களில் சுமார் 45% உயர்ந்துள்ளது.

வியாழன் (05) அன்று 02,40 GMT மணி நேரப்படி பிட்கொயின் ஒன்றின் பெறுமதி முந்தைய நாளை விட 2.2% அதிகரித்து 100,027 அமெரிக்க டொலர்களில் வர்த்தகம் செய்யப்பட்டது.

எதிர்வரும் வாரங்களில் அதன் பெறுமதியானது $120,000 எட்டும் என்றும் இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ள நிதி நிறுவனமான Mudrex இன் தலைமை நிறைவேற்று அதிகாரி எடுல் படேல் (Edul Patel) கணித்துள்ளார்.