நஷ்டத்தை ஈடுகட்டும் கமல்?

04.01.2023 22:21:32

கமல்

நடிகர் கமல் விக்ரம் பட வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் பிஸியாகிவிட்டார். அவரது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலமாக மாற்ற ஹீரோக்களை வைத்தும் படங்கள் எடுக்க தொடங்கி இருக்கிறார். மேலும் தற்போது பிக் பாஸ் ஷோ, இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் என எப்போதும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார் அவர்.

இந்நிலையில் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான உத்தமவில்லன் படத்தின் நஷ்டத்தினை ஈடு செய்யும் வகையில் இன்னொரு படம் நடிக்க கமல் ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

கமல் - லிங்குசாமி கூட்டணி

உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமி சமீபத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது தான் மீண்டும் கூட்டணி சேர்வது பற்றி இருவரும் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் கமல் படம் நடிப்பதை லிங்குசாமி சமீபத்திய பேட்டியில் அறிவித்து இருக்கிறார். ஆனால் படத்தை அவரே இயக்குகிறாரா அல்லது வேறு இயக்குனர் இணைவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.