விசேட சந்திப்பு!

17.05.2025 09:32:13

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியை, நேற்றையதினம் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருடன் ஒரு சுமூகமான மற்றும் பயனுள்ள சந்திப்பை மேற்கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், தூதுவரின் அன்பான விருந்தோம்பலையும், இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான அவரது தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பாராட்டுவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

 

இதன்போது, பல்வேறுபட்ட சமகால பிரச்சினைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.