50வது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா!

30.07.2025 09:12:50

உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 50வது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா (Toronto International Film Festival – TIFF) இந்தாண்டு செப்டம்பர் 4 முதல் 14 வரை நடைபெறவுள்ளது.

இந்த மைல்கல் விழாவில் ‘John Candy: I Like Me’ எனப்படும்  ஆவணப்படம் திரையிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆவணப்படம் கனடிய நகைச்சுவை நடிகர் ஜான் காண்டியின் வாழ்க்கையையும், அவரது பண்பாடும், சினிமா உலகில் அவர் விட்டுச் சென்ற தாக்கங்களையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது TIFF 2025 விழாவில், நாடுகள் பலவற்றிலிருந்து 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. இதில் சிறந்த பன்னாட்டு திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் உலக திரையுலகின் புதிய முயற்சிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து TIFF அமைப்பாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “இந்த 50வது ஆண்டு, TIFF-இன் வெற்றி பயணத்தில் ஒரு பெரும் புள்ளி. நாங்கள் வழங்கும் திரைப்படங்கள், கலாசாரங்களைத் தாண்டி உலக மக்களை ஒன்று சேர்க்கும் ஆற்றலுடையவை. இது வெறும் திரை விழா அல்ல; உலக சினிமாவின் திருப்புமுனை. கனடா அரசாங்கம் மட்டுமல்லாது கலாசார நிறுவனங்கள் மற்றும் உலக திரை விமர்சகர்கள் இந்த விழாவுக்கு உற்சாகமாக ஆதரவு வழங்கி வருகின்றனர்” இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.