ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் வரை இந்தியா வரமாட்டேன்.

17.08.2026 08:53:59

இந்தியாவில் தங்கியுள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படும் வரை இந்தியாவுக்கு வரப்போவதில்லை என பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷத்தில் இடம்பெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பங்களாதேஷத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நாடு கடத்துமாறு பங்களாதேஷ் அரசு இந்தியாவிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.

பங்களாதேஷின் இந்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாக இந்தியா முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஷேக் ஹசீனா எதிர்வரும் டிசம்பர் மாதம் பங்களாதேஷத்துக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகவும், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹசீனா நாடு கடத்தப்படுவது தொடர்பான விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.