பிரான்சில் பேச்சுவார்த்தைகள் நிறுத்தம்

17.07.2024 07:48:48

பிரான்ஸ் அரசியலில் புதிய குழப்பம் துவங்கியுள்ளது. ஆம், வெற்றி பெற்ற இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே மோதல் உருவாகியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திடீரென நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார். தேர்தலில் முதல் சுற்றில் தீவிரக் கொள்கைகள் கொண்ட வலதுசாரிக் கட்சி முன்னிலை வகுத்தது.

உடனடியாக அக்கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் மற்ற கட்சிகள் இணைந்து தீட்டிய திட்டத்தால், இரண்டாவது சுற்று தேர்தலில் வலதுசாரிக் கட்சி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது. இடதுசாரிக் கட்சிகள் மற்ற கட்சிகளைவிட அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றன.

ஆனால், எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை!

 

ஆகவே, ஆட்சியமைப்பதற்காக இடதுசாரிகள் இணைந்து புதிதாக New Popular Front (NFP) என்னும் கூட்டணியை உருவாக்கினார்கள்.

ஆனால், எந்தக் கட்சியைச் சேர்ந்தவரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.ஆகவே, கூட்டணிக்கட்சிகளுக்குள் மோதல் உருவாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து, கூட்டணியில் அதிக வாக்குகள் பெற்ற France Unbowed party, மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதனால், பிரான்ஸ் அரசியலில் ஒரு குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.