தமிழக விவசாயிகளுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு திகழ்கிறது !
01.04.2021 10:58:34
தமிழக விவசாயிகளுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அ.தி.மு.க. மறுபடியும் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் இலவச சலவை இயந்திரம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அ.தி.மு.க. அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரங்கள் மேற்கொள்வதாகவும் முதலமைச்சர் இதன்போது குற்றம்சாட்டினார்.
மேலும் தேர்தலில் மக்கள் தி.மு.க.வினருக்கு உரிய பதில் அளிப்பார்கள் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.