வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு : இந்திய மத்திய அரசு

09.12.2023 09:29:37

“கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் 403 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இயற்கை காரணங்கள் விபத்து என பல்வேறு காரணங்கள் இந்த உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது.

34 நாடுகளில் மாணவர்கள் படித்து வரும் நிலையில், கனடாவில்தான் அதிக மாணவர்கள் பலியாகியுள்ளனர். அதாவது, கனடாவில் 91 இந்தியர்கள் கடந்த 5 ஆண்டுகளில் உயிரிழந்துள்ளனர். 

 

அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து (48), ரஷ்யா (40), அமெரிக்கா (36), ஆஸ்திரேலியா (35), உக்ரைன் (21), ஜெர்மனி (20), சைப்ரஸ் (14), இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 10 என மொத்தம் 403 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

 

வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது.
 

தனிப்பட்ட வழக்குகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஆகிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட நடவடிக்கை எடுக்கப்படும். 

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதர்களும் உயர் அதிகாரிகளும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழங்களுக்கும் அடிக்கடி சென்று அங்கு பயிலும் இந்திய மாணவர்களுடன் உரையாடி வருகின்றனர்.” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.