வவுனியாவில் 8 பேர் கொரோனாவிற்கு பலி

14.09.2021 05:59:04

வவுனியாவில் தூக்கில் தொங்கி மரணமடைந்தவர் உட்பட 8 பேர் கொரோனா தொற்றினால் நேற்று (13) மரணமடைந்தனர்.
குறித்த நபர்களில் மூவர் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிற்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் மரணமடைந்தனர்.

மற்றையவர் வவுனியா பாரதிபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் தூக்கில் தொங்கி மரணமடைந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஏனைய இருவர் வவுனியா முதியவர் காப்பகம் மற்றும் அவர்களது வீடுகளில் சுகவீனம் காரணமாக மரணமடைந்திருந்தனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.