2,038,530 குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு
28.08.2021 07:09:53
வாழ்வாதாரத்தை இழந்துள்ள 5 இலட்சத்து 75 ஆயிரத்து 520 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 23 ஆம் திகதி முதல், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரேதேச செயலகங்கள் மூலமாக முதற்கட்டமாக இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளமையால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள 20 இலட்சத்து 38 ஆயிரத்து 530 குடும்பங்கள், 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.