அழித்தவர்களை அழைத்து பொன்னாடை போர்க்கும் வெட்கம் கெட்ட சமூகம்!
ரணில் விக்ரமசிங்கவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கானது இருக்கின்ற நிலங்களை இன்னும் இழந்து செல்வதாகவே அமைவதோடு, ஒரு கட்டமைப்பாக ஒரு தேசமாக ஒரு இனத்தின் விடுதலைக்காக இருந்த எம்மை சிதைத்த பெருமையும் அவரைத் தான் சாரும் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். |
வவுனியாவில் நேற்று (தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அநுரகுமார திசாநாயக்க எமது இணைந்த வடக்கு கிழக்கை பிரித்தவராக இருக்கின்றார். இவ்வாறானவர்களை தென்பகுதியில் இருந்து அழைத்து வந்து மாலை போட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்கின்ற ஒரு வெட்கம் கெட்ட சமூகமாக நாம் மாறி வருகின்றோம். ஆகவே இந்த பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தியை சொல்வதற்காகவே நான் வந்திருக்கின்றேனே தவிர ஒரு ஜனாதிபதியாக வருவதற்கு அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அந்த கதிரையை தட்டி படிப்பதற்காகவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். |