இன்று கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் நாட்டிற்கு வருகை..
23.04.2021 09:44:33
மியன்மாரில் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களும் இன்று நாடு திரும்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மார் அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பல்வேறுகட்ட கலந்துரையாடலின் பின்னர் குறித்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீனவர்கள் சிங்கப்பூர் எயார்லைன்ஸுற்குச் சொந்தமான விமானம் ஊடாக மியன்மாரில் இருந்து சிங்கப்பூருக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அழைத்துவரப்படும் மீனவர்கள் அனைவரும் தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.