அதிபர் புதின் இன்னும் மாற்றவில்லை

08.05.2022 11:35:31

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு தோல்வி ஏற்பட்டால் தாங்க முடியாது என்று நம்புகிறார். அதே வேளையில், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான எந்த அறிகுறிகளையும் அவர் காட்டவில்லை என்று ரஷியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் பில் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

 

ரஷிய அதிபரைப் பற்றி அதிகம் அறிந்தவரான, அமெரிக்க உளவுத்துறை(சிஐஏ) இயக்குனராக இருக்கும் பில் பர்ன்ஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

 

ரஷியப் படைகள் கீவை கைப்பற்றத் தவறிய போதிலும், தென்கிழக்கு டான்பாஸ் பகுதியில் முன்னேற அவர்கள் போராடினாலும், உக்ரைனை தனது படைகளால் தோற்கடிக்க முடியும் என்ற தனது பார்வையை ரஷிய அதிபர் இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை.

 

உக்ரைனில் வெற்றி பெறுவதற்காக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாஸ்கோ தயாராக இல்லை. ஆனால், இந்த சாத்தியக்கூறுகளை நாம் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. 

 

போர் எப்படி முடிவடையும் என்று என்னால் கணிக்க முடியாது. தற்போதைய போர்க்கள நிலைமையை என்னால் மதிப்பீடு செய்யவும் முடியாது.

 

உக்ரேனின் எதிர்ப்பை முறியடிக்கும் ரஷ்ய இராணுவத்தின் திறனில் புதினுக்கு நம்பிக்கை உள்ளது. முக்கிய போர்க்களத்தில் தோல்விகளை சந்தித்தாலும் ரஷ்ய இராணுவத்தின் திறமை மீதான புதினின் நம்பிக்கை இன்னும் அசைக்கப்படவில்லை.