நாடு முழுவதும் 70,000 பொலிஸார் குவிப்பு!
|
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலை நிலவுவதால் பாதுகாப்பு பணிகளுக்காக 70,000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் எதிர்வரும் சனிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு போராட்டங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 70000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். |
|
இணையதளம் வழியாக வன்முறை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு அழைப்புகள் விடுக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் லாரண்ட் நுனெஸ், வன்முறை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். வன்முறை, கொள்ளை, போன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது எந்தவொரு சமரசமும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்த அமைச்சர் லாரண்ட் நுனெஸ், நாடு முழுவதும் நிலை நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பொது ஒழுங்கை பராமரிக்க காவல்துறையினருடன் சேர்ந்து, சிறப்பு தந்திரப் பிரிவு அதிகாரிகள், கவச வாகனங்கள், குதிரைப்படை ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அத்துடன் ஹெலிகாப்டர்கள், தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனங்கள், ட்ரோன்கள் போன்ற உபகரணங்களும் போராட்டத்தை கட்டுப்படுத்த நிலைநிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |