முல்லைத்தீவில் 400 குடும்பங்களுக்கு கொரோனா இடர்கால உதவி

29.09.2021 07:35:35

முல்லைத்தீவில் 400 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு கொரோனா இடர்கால உதவி வழங்கும் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இன்று தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளை பேணி ஜந்து பயனாளிகளுக்கு மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் உதவி மாவட்ட செயலாளர் திருமதி லிசோ கேகிதா முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகள் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு மூலம் அங்கவீனமுற்ற நபர்களின் சமூக உள்ளடக்கம் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் ஓர்ஹான் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்