
அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி!
அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் அன்டனி அல்பனீஸ் பிரதமராகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலிய தேர்தல் வரலாற்றில் கடந்த 21 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் முதல் அவுஸ்திரேலிய பிரதமராக அன்டனி அல்பானீஸ் காணப்படுகின்றார்.
அவுஸ்திரேலியாவில் மொத்தம் 150 நாடாளுமன்ற தொகுதிகள் காணப்படுகின்ற நிலையில் அதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே ஆட்சியமைப்பதாகவும் நேற்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில், அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் போட்டியிட்ட நிலையில் பிரதமர் அண்டனி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கி வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில்,அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அன்டனி அல்பனீஸ் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அண்டனி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கியது. எதிக்கட்சி தலைவர் பீற்றர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி களமிறங்கியது.
இந்நிலையில்,அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அன்டனி அல்பனீஸ் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.