ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார்.

07.03.2021 08:25:08

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 3 நாட்கள் விஜயமாக  எதிர்வரும் 9ஆம் திகதி சென்னைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர், அன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 10ஆம் திகதி காலை, சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூரிலுள்ள பொற்கோவிலுக்கு செல்கிறார். பின்னர் தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை சென்னை திரும்புகிறார்.

இதேவேளை எதிர்வரும் 11ஆம் திகதி காலை, சென்னை அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் பிற்பகல் தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.