பொது இடத்தில் மன்னர் சார்லஸிற்கு ஏற்பட்ட சங்கடம்

18.09.2022 09:47:21

சார்லஸிற்கு ஏற்பட்ட சங்கடம்

பிரித்தானியாவின் புதிய மன்னரான சார்லஸ், கார்டிஃபில் மக்கள் கூட்டத்தை நேரில் சந்தித்தபோது, பிரித்தானியர் ஒருவர் 'நீங்கள் என் மன்னர் இல்லை' என்று கூறுவது மன்னரை பெரிதும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, அரியணை அவரது வாரிசுக்குக் கொடுக்கப்பட்டது. புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் கார்டிஃப் கோட்டைக்கு வெளியே பொதுமக்களை சந்தித்தவேளை இந்த சம்பவம் நடந்துள்ளது.

நீங்கள் என் மன்னர் இல்லை

அந்தக் காணொளியில், மன்னர், கூட்டத்தில் இருந்தவர்களுடன் கைகுலுக்கி சிரித்துக்கொண்டிருந்தபோது, தாடியுடன் காணப்பட்ட பிரித்தானியர் ஒருவர் சார்லஸை நோக்கி, "எங்கள் வீடுகளை சூடாக்க நாங்கள் போராடும்போது, ​​​​உங்கள் அணிவகுப்புக்கு நாங்கள் பணம் செலுத்த வேண்டும். வரி செலுத்துவோர் எதற்காக உங்களுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் பணம் செலுத்த வேண்டும்? "நீங்கள் என் மன்னர் இல்லை!" என்று தெரிவித்தார்.

மன்னர் சார்லஸ் அந்த நபரை நோக்கி சிறிது நேரம் திரும்புவதைக் காணலாம், ஆனால் உடனடியாக ஒரு பாதுகாப்பு அதிகாரி இருவருக்கும் இடையில் நின்றுகொண்டதால், சார்லஸ் விரைவாக அங்கிருந்து நகர்ந்தார்.

மௌனமாகத் திரும்பியதால், அந்த மனிதனின் குற்றச்சாட்டுக்கும் மோதலுக்கும் மன்னர் பதிலளிக்கவில்லை

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அரச குடும்பத்திற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து 'இறையாண்மை மானியம்' (sovereign grant) என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது, இது பிரித்தானியாவின் திறைசேரியால் அரச குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.