நாட்டில் மேலும் 180 பேர் கொரோனாவால் மரணம்!
06.09.2021 17:25:15
நாட்டில் மேலும் 180 கொவிட் மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (05) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,320 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தோரில் 97 ஆண்களும், 83 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.