பெரும் பின் விளைவுகளை கோட்டாபய அரசு சந்திக்கப் போகிறது - சம்பந்தன் எச்சரிக்கை

12.07.2021 11:15:01

ஜனநாயக வழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோரை கைது செய்யும் அரசின் இந்த அராஜகம் தொடர்ந்தால், அரசாங்கம் பெரும் பின்விளைவுகளை விரைவில் சந்தித்தே தீரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு எதிராக ஜனநாயக வழியில் எதிர்ப்புத் தெரிவிக்க முற்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.