போருக்கு பிறகான வாழ்வைப் பேசும் ‘அந்தோனி’.

09.02.2026 14:11:45

‘கயல்’ வின்சன்ட், டி.ஜே.பானு நடிக்கும் படம், ‘அந்தோனி’. இதில், இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், சவுமி நடித்துள்ளனர்.

இவர்களுடன் நிழல்கள் ரவி, அருள்தாஸ் என பலர் நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா- ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ளனர். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

இலங்கையில் போருக்கு பிறகான வாழ்க்கையின் சாரம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. ஓசை பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் நெய்தல் நிலப் பின்னணியில் கடல் வாழ்வியல், காதல், குடும்ப வாழ்வுடன் , ஆழமான உணர்வுகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் தோற்றத்தை நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டனர். இந்தப்படம், விரைவில் வெளியாக இருக்கிறது.