’தேர்தல்களைத் தடுப்பவர்கள் ஜனநாயக விரோதிகள்’

02.06.2024 09:00:00

ஒரு ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணையை பெற வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் விட்டால் அவர்கள் ஜனநாயக - மக்கள் விரோதிகள் ஆவர் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தனது கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். பாராளுமன்றம், நீதிமன்றம் ஊடாக அனுமதிகளைப் பெற்று, மக்கள் ஆணையின் மூலம்தான் தேர்தல்களைப் பிற்போட முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாறுபட்ட கருத்துகளுக்கு ஜனாதிபதி உரிய பதில்களை வழங்காது உள்ளபோது தேர்தல்கள் எவ்வாறு நடக்கும் என பொதுமக்களும் குழம்பிப் போய் உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு தேர்தல்களை நடத்தி மக்களின் ஆணையை பெற வேண்டும். அவ்வாறு நடைபெறாமல் விட்டால் அவர்கள் ஜனநாயக மக்கள் விரோதிகள் ஆவார் என்றார்