சந்திப்பு.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (18) அலரி மாளிகையில் வைத்து, தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மகா சங்க நாயக்க தேரர்கள் குழுவினரைச் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பில், ப்ரா தம்மவஜிரபண்யாசார்ய மஹாதேரர், வட் ப்ரா செதுபொன் விமோல்மங்கலாராம் ராஜவரமஹாவிஹாரையின் பிரதி விகாராதிபதி, மஹாசுலாலொங்கோர்ன்ராஜவித்யாலய பல்கலைக்கழகத்தின் திரிபிடக கல்வி மையத்தின் பணிப்பாளர் தேரர் உள்ளிட்ட தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் பௌத்தத் தொடர்புகள், மத மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துதல் குறித்து சுமுகமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
கலந்துரையாடலின் நிறைவில், இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் நீண்டகால பௌத்த மற்றும் கலாசார உறவுகளை மேலும் பலப்படுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வளர்த்தல் குறித்து சிநேகபூர்வமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் இறுதியில், இரு நாடுகளுக்கு இடையிலும் நிலவி வரும் நீண்ட கால பௌத்த மற்றும் கலாசார உறவினைச் சித்தரிக்கும் வகையில், தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்களினால் பிரதமருக்கு விசேட நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நினைவுப் பரிசுகள் இரு நாடுகளினதும் பொதுவான பௌத்த பாரம்பரியம், கலாசார விழுமியங்கள் மற்றும் பரஸ்பர மரியாதையைப் பிரதிபலிக்கும் நினைவுச் சின்னங்களாக அமைந்தன.