கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு தகுதி

25.05.2022 17:41:13

 

சர்வதேச செஸ் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி 9 தொடர்களாக நடத்தப்படுகிறது. இதன் 4-வது தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

 

இதில் விளையாடி வரும் சென்னையை சேர்ந்த 16 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனை (நார்வே) வீழ்த்தி இருந்தார்.

இவர் அரை இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை சேர்ந்த நம்பர் ஒன் வீரரான அனிஷ்கிரியை எதிர்கொண்டார்.

 

இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்கு இந்தப் போட்டி நிறைவு பெற்றது.

 

பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் சீனாவை சேர்ந்த டிங்லிரனை எதிர் கொள்கிறார். அவர் அரை இறுதியில் மேக்னஸ் கார்ல்செனை சந்தித்தார்.