
நெல்லுக்கான கொள்வனவு விலை அறிவிப்பு!
06.02.2025 08:20:13
நெல் கொள்வனவுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாடு நெல் ஒரு கிலோ கிராம் நாடு நெல் 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோ கிராம் 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோ கிராம் 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னே தெரிவித்துள்ளனர்.