அமெரிக்காவுடன் முரண்படாத சிறிலங்கா!

26.12.2022 19:30:33

சிறிலங்கா அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் கீத் நொயர் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்தைக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளமை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

சுயாதீனமான செயற்பாடு

மேலும் கருத்து தெரிவிக்கையில், “இது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சுயாதீனமான நடவடிக்கை.

சிறிலங்கா அரசாங்கம் கரிசனைகளை வெளியிடும். ஆனால், தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்காது. இது அவர்களின் சுயாதீனமான செயற்பாடு

அவர்கள் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான சுயாதீன வழிமுறைகளை கொண்டுள்ளனர்.இது தொடர்பில் நாங்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை.

நாங்கள் தொடர்ந்து எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம். ஆனால் எங்களால் எதனையும் செய்ய முடியாது” - என்றார்.