
1000 இடங்களில் முதல்வர் மருந்தகம்!
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதலாக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆட்சி முடிய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே உள்ள நிலையில் மேலும் பல புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது.
முன்னதாக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அம்மா மருந்தகம் தொடங்கப்பட்டது. அதுபோல பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது தொடங்கபட்ட மத்திய அரசின் மருந்தகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி திறந்து வைக்கிறார்
தமிழ்நாடு முழுவதும் 1000 பகுதிகளில் திறக்கப்படும் இந்த மருந்தகங்களில் 33 மருந்தகங்கள் சென்னையில் அமைகின்றன. இந்த மருந்தகங்கள் மூலம் பல அவசியமான மருந்து, மாத்திரைகளை வெளியில் வாங்குவதை விட குறைந்த விலைக்கு வாங்க முடியும் என்பதால் எதிர்பார்ப்பு உள்ளது.