வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் மரணம்!
02.08.2021 04:35:05
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கொவிட் தொற்று நோயால் மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார் வவுனியா பாவற்குளம் பகுதியை சேர்ந்த 70வயதான குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.