அரசு சார்பில் மானியம்.. முதல்வர் விஜய் உத்தரவு.

28.07.2026 12:08:00

தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக வெளியிட முடியாமல் முடங்கி கிடக்கும் தரமான சின்ன பட்ஜெட் படங்களை முதலில் திரைக்கு கொண்டுவருவதற்கான பணிகளை உடனடியாத் தொடங்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகனிடம் முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அத்தகைய திரைப்படங்களுக்கு அரசு சார்பில் உரிய மானியம் வழங்க வேண்டும் என்றும், அவற்றின் ரிலீசுக்கு தடையாக இருக்கும் அத்தனை சிக்கல்களையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் முதல்வர் மனதார கேட்டு கொண்டதாக அமைச்சர் ராஜ்மோகன் அண்மையில் மேடையில் உணர்ச்சிபூர்வமாக பேசினார். 

 

திரைத்துறையிலிருந்து வந்த ஒருவரே இன்று முதலமைச்சராக அமர்ந்திருப்பதால், அங்குள்ள ஒவ்வொரு கலைஞனின் இன்னல்களும் பொருளாதாரச் சுமைகளும் அவருக்கு அத்துப்படி என்பதால் அவர் இந்த காரியத்தில் தனிக்கவனம் செலுத்துவதாகவும் ராஜ்மோகன் குறிப்பிட்டார். 

 

முதல்வரின் இந்த சிறப்பான நடவடிக்கையும் மனிதநேயமிக்க உத்தரவும் பல சிறிய தயாரிப்பாளர்களுக்கும் இளம் கலைஞர்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியையும் பெருமிதத்தையும் அளித்துள்ளதுடன், தமிழ் சினிமா துறைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதற்கான அடையாளமாக மாறியுள்ளது என்றும் திரையுலகினர் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்து வருகின்றனர்.