டெண்டுல்கரிடம் கோலி ஆலோசனை பெற வேண்டும்
15.07.2022 11:41:23
யுவராஜ்சிங்குடன் கோலி பேச வேண்டும். கிரிக்கெட் விளையாட்டுக்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் கோலி பேச வேண்டும்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீப காலமாக ரன்களை குவிக்க திணறி வருகிறார். இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறும்போது
டெண்டுல்கரிடம் கோலி பேசி ஆலோசனை பெற வேண்டும். அவரை கோலி மிகவும் மதிக்கிறார். அதே போல் யுவராஜ்சிங்குடன் கோலி பேச வேண்டும். அவர்கள் இருவரும் கோலிக்கு உதவ முடியும். கிரிக்கெட் விளையாட்டுக்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் கோலி பேச வேண்டும் என்றார்.