தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல்

13.01.2022 06:19:24

பல்லடத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததாக தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல் நடத்திய பாஜகவினர் 7 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து பாஜக இளைஞரணி நிர்வாகி ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவினர் அளித்த புகாரில் வியாபாரி முத்துசாமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.