சூரியின் படத்தில் இணையும் பிரியாமணி!

29.12.2024 08:21:00

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவைக் கலைஞராக இருந்த சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் ஹிட்டானதைத் தொடர்ந்து அவர் நடித்த கருடன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களும் வெற்றிபெற்று அவரை முன்னணிக் கதாநாயகன் ஆக்கின.

இதற்கிடையில்ல் டிசம்பர் 20 ஆம் தேதி விடுதலை இரண்டாம் பாகமும் ரிலீஸாகவுள்ளது. அதன் பிறகு சூரி பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகன் ஆக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் கதைக்கருவை சூரி தன்னுடைய சொந்த வாழ்வில் நடந்த சம்பவத்தில் இருந்து எடுத்து அதை கதையாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

அந்த கதைக்கு பிரசாந்த் பாண்டியராஜ் திரைக்கதை அமைக்க சூரியுடன் ஐஸ்வர்யா லஷ்மி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கருடன் படத்தைத் தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் குமார் இந்த படத்தையும் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கதாநாயகனின் அக்கா கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.