சாதனை படைத்த முதல் இந்திய பந்து வீச்சாளர்
யுஸ்வேந்திர சாஹல் 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லாட்ஸ் மைதானத்தில் இந்திய முன்னாள் வீரர் அமர்நாத் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 10 ஓவர் பந்து வீசி 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் சாஹல் புதிய சாதனை படைத்துள்ளார். லாட்ஸ் மைதானத்தில் இந்திய முன்னாள் வீரர் அமர்நாத் 1983-ம் ஆண்டு 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இந்திய வீரர்களின் சாதனையாக இருந்தது.
அதற்கு அடுத்தப்படியாக ஆஷிஸ் நெக்ரா 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்நிலையில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இவர்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.