தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அவசர அறிக்கை.

13.11.2026 15:16:07

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருத முடியாது என வெளியாகும் செய்திகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தபோதிலும், 2025 ஆம் ஆண்டு முதல் எதிரெதிர் தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினை காரணமாக, செயலாளர் பதவியில் பிரச்சினைக்குரிய கட்சியாக அது பெயரிடப்பட்டுள்ளது என்பதாகும்.

குறித்த பிரச்சினையைத் தீர்க்குமாறு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில், அது தொடர்பான தரப்பினரைக் கடந்த 06 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்துக் கலந்துரையாடியதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அந்தக் கலந்துரையாடலின் போது, இரு தரப்பினரதும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டதாவது, செயலாளர் பதவிப் பிரச்சினை தொடர்பாக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வரும் வழக்கின் தீர்ப்பு கிடைத்ததன் பின்னர் இது குறித்துத் தீர்மானமொன்றை எடுப்பதே பொருத்தமானது என விடயங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.