ரெலோவின் தேசிய மாநாட்டைப் புறக்கணித்த முக்கிய தலைவர்கள்!

15.06.2026 08:59:21

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசியமாநாட்டில், கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கூட்டத்திற்கு சமூகம் அளித்திருக்கவில்லை. முன்னாள் உப தலைவர் ஹென்ரி மகேந்திரன், பிரசன்னா இந்திரகுமார், சபா குகதாஸ், வினோ நோகராதலிங்கம், புவனேஸ்வரன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். குறித்த தரப்பினர் கட்சியின் தலைமை சுயநலமாக செயற்ப்பட்டு வருவதுடன், கட்சியின் வீழ்ச்சிக்கும் காரணமாக உள்ளதாக பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.