அமெரிக்காவின் லூசியானாவில் பாரிய வெடிப்பு சம்பவம்.

23.08.2025 11:18:16

அமெரிக்காவின், லூசியானாவில் உள்ள மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்றையதினம் (22) வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

லூசியானாவில் உள்ள டாங்கிபஹோவா திருச்சபையின் ரோஸ்லேண்டில் அமைந்துள்ள மசகு எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஸ்மிட்டிஸ் சப்ளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த வெடிப்பைத் தொடர்ந்து ஒரு பெரிய புகை மூட்டம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவம் நேற்று பிற்பகல் 1 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து டாங்கிபஹோவா திருச்சபை அரசாங்கம் விரைவில் அப்பகுதியில் உள்ளவர்களை வெளியேற்றியது.

இதேவேளை, அந்த மசகு எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக, அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் சுவாசப் பிரச்சினைகளை சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அருகில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.