மேல் மாகாணத்தில் காவல்துறையினர் விசேட நடவடிக்கை

24.11.2021 06:36:46

பொது மக்கள் முறையாக கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுகின்றனரா என்பதை கண்டறியும் விசேட நடவடிக்கையில் நேற்றைய தினம் மேல் மாகாணத்தில் மொத்தம் 23,193 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது 6,324 நபர்கள் எச்சரிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், முகக் கவசங்களை அணியாத 4,351 பேருக்கு காவல்துறையினர் முகக் கவசங்களை வழங்கி வைத்தனர்.

மேலும் 7,105 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 918 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.