இதுவரை இடம்பெற்ற எல்.பி.எல் போட்டிகளில் ஜப்னா கிங்ஸ் அணி முதலிடத்தில்!
லங்கா ப்ரிமியர் லீக் தொடரில் தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் கண்டி வொரியர்ஸ் அணி, 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணி. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 131 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய கண்டி வொரியர்ஸ் அணி, 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
எல்.பி.எல் தொடரில், இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில், புள்ளிப்பட்டியலில் ஜப்னா கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
7 போட்டிகளில் பங்கேற்ற ஜப்னா கிங்ஸ் அணி, 6இல் வெற்றிபெற்று 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
காலி க்ளடியேட்டர்ஸ் அணி, 7 போட்டிகளில் 3இல் வெற்றிபெற்று 7 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தம்புள்ளை ஜயண்ட்ஸ் அணி, 8 போட்டிகளில் 3இல் வெற்றிபெற்று 7 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும், கொழும்பு ஸ்டார்ஸ் அணி, 7 போட்டிகளில் 3இல் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன.
கண்டி வொரியர்ஸ் அணி, 7 போட்டிகளில் 2இல் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் இறுதி இடத்திலும் உள்ளது.