மனித உரிமையை பாதிக்கும் பருவநிலை மாற்றம்: ஐ.நா

14.09.2021 10:57:51

உலகின் பருவநிலை அதிவேகமாக மாறி வருகிறது. அதிகரிக்கும் வாகன மற்றும் தொழிற்சாலைப் புகை காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக உலக அளவில் புவி வெப்பமயமாதல் உண்டாகிறது. இதுகுறித்து தற்போது ஐநா கருத்து தெரிவித்துள்ளது.
 


பருவநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகள் இடையே ஏற்படும் மாற்றுக்கருத்து சர்வதேச அளவில் மனித உரிமையை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.


இதுகுறித்து ஐநா மனித உரிமை ஆணையத் தலைவர் மைக்கேல் பாட்செட் மேலும் கூறுகையில், இந்த நூற்றாண்டின் மனித உரிமைக்கு ஏற்படும் மிகப்பெரிய சவாலாக சுற்றுச்சூழல் மாற்றம் உருவெடுக்கும் என்று எச்சரித்துள்ளார்.