தனித்து என் போட்டி என்ற முடிவில் விஜய்?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி அமையலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. காங்கிரஸின் வருகைக்காக தவெக தலைமை காத்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இதுவரை எந்தவொரு உறுதியான முடிவையும் எடுக்காமல் இழுபறி நிலையில் உள்ளது.
இந்த தாமதத்தால் அதிருப்தியடைந்த விஜய், இனி காங்கிரஸ் கட்சி வந்தாலும் கூட்டணி வேண்டாம் என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
வரவிருக்கும் தேர்தலில் யாருடனும் கூட்டணி இன்றி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அவர் தனது கட்சி நிர்வாகிகளிடம் திட்டவட்டமாக கூறியுள்ளதாக தெரிகிறது. விஜய்யின் இந்த 'தனி வழி' முடிவு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் இந்த முடிவால், காங்கிரஸ் கட்சி மீண்டும் திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சியின் மேலிட தலைவர்களுக்கு வேண்டுமானால் ஆறுதல் அளிக்கலாம், ஆனால் திமுகவிடம் குறைந்த இடங்களை பெற்றுக்கொண்டு இரண்டாம் நிலையில் நீடிப்பதை காங்கிரஸ் தொண்டர்களும் கீழ்மட்ட நிர்வாகிகளும் விரும்பவில்லை என கூறப்படுகிறது