அர‌சி‌ன் தேனிலவு காலம் கடந்து போய் வி‌ட்டது.

17.06.2026 14:31:24

தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, சர்வதேச நாணய நிதி வழியாக சந்தை பொருளாதாரத்தை ஏற்று கொண்டுள்ளது. அந்த மாற்றத்தை நாம் வரவேற்கிறோம். ஆனா‌ல், அதே மாதிரியான நடைமுறை அணுகுமுறை தமிழர் தேசிய பிரச்சினைகளை கையாளுவதிலும் தேவைப்படுகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி 

தலைவ‌ர் மனோ கணேசன், கனடா டொராண்டோவில் நடைபெற்ற தமிழ் கனடிய இலங்கையர் ஒன்றுகூடலில் உரையாற்றியபோது கூ‌றியு‌ள்ளா‌ர். 

 

அவர் மேலும் கூறியதாவது;

 

நான் கூறும், தமிழர் தேசிய பிரச்சினைகள் என்பன பற்றி தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகள் தந்துள்ளது.

 

மாகாணசபை தேர்தல்களை நடத்துதல், பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்தல், மலையக மக்களுக்கு வீடமைப்பு, வாழ்வாதார, காணி உரிமைகளை வழங்குதல், அரசியல் கைதிகளை விடுவித்தல், பு‌திய அரசியலமைப்பு சீர்திருத்தங்களை ஆரம்பித்தல் ஆ‌கியவற்றை AKD இனியும் ஒத்தி போட முடியாது. இனியும் இது புதிய அரசு இ‌ல்லை. 

 

ஏற்கனவே ஒன்றரை வருடங்கள் ஆ‌கி விட்டன. ஆகவே, அர‌சி‌ன் தேனிலவு காலம் கடந்து போய் வி‌ட்டது. இனியும் இது புதிய அரசு இ‌ல்லை. என குறிப்பிட்டுள்ளார்.