ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெடிவிபத்து

13.01.2022 06:17:56

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே களத்தூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பட்டாசு ஆலை உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.