இன்று முதல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் – நரேந்திர பெர்னாண்டோ

16.02.2021 10:49:14

 

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று முதல் கொ ரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித் துள்ளார்.

நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தி யசாலையில் கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பாராளு மன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பெறப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ வைத்தியசாலைக்கு வருகை தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்ந் தும் 4 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப் படும் என அவர் தெரிவித்துள்ளார்.