சர்வதேச குற்றக் கும்பலின் தலைவன் நாடு கடத்தல்.

10.08.2026 08:11:33

அயர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவனான டேனியல் கினஹான்(Daniel Kinahan) டப்ளின் சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அயர்லாந்து ராணுவத்தின் விமானம் மூலம் அயர்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவராக கருதப்படும் டேனியல் கினாஹான் பலத்த வாகன பாதுகாப்புடன் டப்ளினில் உள்ள சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

    

 

டப்ளினின் பால்டோனலில் உள்ள காசெமெண்ட் விமான நிலையத்தில் டேனியல் கினாஹான்(Danial kinahan) வந்து இறங்கிய உடன் பலத்த பாதுகாப்பு கொண்ட வாகனங்கள் அவரை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக புறப்பட்ட நிலையில் தற்போது அந்த வாகன பேரணி சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளது.

டேனியல் கினாஹானை ஏற்றிக் கொண்டு விமானம் துபாயில் இருந்து புறப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 70,000க்கும் மேற்பட்டோர் இந்த விமானத்தை ஆன்லைன் மூலமாக விமானத்தை தீவிரமாக கண்காணித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த டேனியல் கினாஹன், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகிய பெரும் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

டேனியல் கினாஹன் மிகப்பெரிய குற்றக் கும்பலின் தலைவன் என்று டப்ளின் உயர்நீதிமன்றத்தால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு கினாஹன் கார்டல் கும்பலும், ஹட்சி பிரிவினருக்கும் இடையே வெடித்த அதிகாரப் போட்டியின் போது கிட்டத்தட்ட 18 உயிர்கள் கொல்லப்பட்டது.

அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் இந்த கார்டல் கும்பல்கள் நடத்திய இரக்கமற்ற போரினால் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த 2022ம் ஆண்டு கூட டேனியல் கினாஹனை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.’

கிட்டத்தட்ட அயர்லாந்து, பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த குற்ற கும்பலை அழிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கொகைன், கஞ்சா, மற்றும் உள்நாட்டு சரக்கு பொருட்கள் ஆகியவற்றை கடத்தி பல கோடிகளுக்கு சட்டப்பூர்வ பணமாக மாற்றியதாக(money laundering) இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.